DEPARTMENT OF TAMIL

அன்புடையீர் வணக்கம்🙏
செல்வத்துள் உயர் செல்வம் மேம்பட்ட செல்வம் கல்விச்செல்வமே அத்தகு கல்வியை வழங்கி வரும் சீரும் சிறப்பும் நிறைந்த ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அமைந்துள்ள இடம்- திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பகுதி கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
2001-2002 ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் தமிழ்த்துறையானதுமுதன்மையான பாடங்களுடன் இணைந்து தகுதி பெற்ற 3 பேராசிரியர்களைக் கொண்டு இயங்கி வந்துள்ளது.பகுதி -1 மொழிப்பாட அளவில் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளது.கல்லூரியின் வரலாற்றில் பல நிகழ்வுகளுடன் விழாக்களை நிகழ்த்தி சிறப்பானதொரு செயல்பாட்டில் செயல்பட்டது.மேலும்  கல்லூரி,பிற கல்லூரிகளில் மாணவர்கள் போட்டிகள் மற்றும் இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு செய்து தனித்திறன்களை வளர்க்க வழிகாட்டியாக செயல்பட்டது.
இதணைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஒப்புதலுடன் 2018-2019 கல்வியாண்டு இளங்கலைத் தமிழ் பட்டப்படிப்பு பயிலப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.முதன்மைப் பாடத்திற்கு உரிய அனைத்து செயல்பாடுகளுடன் தமிழ்த்துறை 9 தகுதியுடன் பேராசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.